Tuesday, July 9, 2013

வாலிபனின் ஜெபம்–9 (Youth Prayer): பெருமைப் பாராட்ட முடியுமா?

பெருமைப் பாராட்ட முடியுமா?

Humble before God

பாவியான என்னை பரிசுத்தனாக்கியது நீர்
தகுதியில்லாத என்னை தகுதிப்படுத்தியது நீர்
 
தள்ளப்பட்ட என்னை தாலந்துகளால் நிரப்பினது நீர்
சிறுமைப்பட்ட என்னை சீற்படுத்தினது நீர்

பிசாசுக்கு அடிமையாயிருந்த என்னை பரமப்பிதாவின் அன்பனாய் மாற்றியது நீர்
பயனற்றவனாய் இருந்த என்னை பயன்படுத்துவது நீர்
 
கேவலமான என்னை கிருபைகளால் நிரப்பியது நீர்
மண்ணுக்குரியவனான என்னை மகிமையால் நிரப்பியது நீர்

நாறிப்போன என்னை நேசித்தவர் நீர்
வறண்டிருந்த என்னை வாழ வைத்தது நீர்
 
அலைந்து கொண்டிருந்த என்னை அழைப்பால் ஸ்திரப்படுத்தியது நீர்
வறண்ட நிலமான என்னை வாய்க்கால்களாய்  மாற்றியது நீர்

இருளாய் இருந்த என்னை இவ்வுலகத்திர்க்கு ஒளியாய் மாற்றியது நீர்
தாகமுற்றிருந்த என்னை திருவசனத்தால் திருப்திப்படுத்தியது நீர்

 
 
இவ்வளவும் நீர் செய்திருக்க இறுமாப்பாய் நான் இருக்க முடியுமா?
பலவற்றையும் நீர் தந்திருக்க நான் பெருமைப் பாராட்ட முடியுமா?

 
 
உம்மோடு இசைந்திட உம்மையே பரைசாற்றிட செய்திடும்
உம் பணி செய்து உமக்கே மகிமைச் சேர்த்திட செய்திடும்
 

Saturday, July 6, 2013

வாலிபனின் ஜெபம்–8 (Youth Prayer)

விண்ணுக்குரியவனாய் மாற்றியருளும்

 
விண்ணுக்குரியவனாய் மாற்றியருளும்

 

 

வழிநடத்தும் வல்ல ஆண்டவரே

உம் வழிகளை காண்பித்தருளும்

வழுவாமல் காப்பவரே

உம் வல்லமையால் நிரப்பியருளும்

வானாதி வானவரே
வாழ்வில் உம் வெளிச்சம் தந்தருளும்
வானத்திற்க்கேரினவரே
விண்ணுக்குரியவனாய் மாற்றியருளும்
 
வீண் சிந்தையையும் செய்கையையும் விட்டிட
விண் சிந்தையால் நிரப்பியருளும்
வீண் போகாமல் காப்பவரே
விழாமல் காத்தருளும்

வாலிபனாய் வாழ்ந்தவரே
வாலிபத்தைக் கரையில்லாமல் காத்திட கிருபையருளும்
வாலிபத்தைத் தருகிறேன்
வல்லமையாய் பயன்படுத்தியருளும்

விரோதமான கையெழுத்தை மாற்றினவரே
வீணானவைகளுக்கு  திரும்பாமல் காத்தருளும்
விரோதிகளை நேசித்தவரே
உம்மைப்போல் நேசிக்க மனம் தந்தருளும்

(தாவீதின்) வேராக வந்தவரே
வேர்பிடிக்கச் செய்தருளும்
விசைப்படகான வாழ்வை
பரிசுத்த ஆவியின் காற்றால் செலுத்தியருளும்

Friday, April 26, 2013

வாலிபனின் ஜெபம்–7 (Youth Prayer)

Praying Youth_Repentance

அழைத்த தேவனையும் உன் அழைப்பையும் மறந்து போனாயோ?

ஆழத்தில் கிடந்த உன்னை தூக்கி எடுத்தாரே நினைவில்லையோ?

 

இருளாய் இருந்த உன் வாழ்வை வெளிச்சமாய் மாற்றினாரே மறந்து போனாயோ?
ஈவாய் புது வாழ்வு கொடுத்தாரே தொழைத்து விட்டாயோ?
 
உன் பாவத்தை சுமந்து உனக்காய் மரித்தாரே மறந்து போனாயோ?
ஊதாரியாய் இருந்த உன்னை உலகத்திற்கு உப்பாய் மாற்றினாரே உணர்வில்லையோ?
 
எத்தனை நாட்கள் தான் இப்படி இரு வாழ்வு வாழ்ந்து கொண்டிருப்பாய்?
ஏற்று கொண்ட தேவனை எத்தனை நாட்கள் தான் ஏமாற்றிக் கொண்டிருப்பாய்?
 

ஐயத்தோடும் வெட்கத்தோடும் வாழவா உன்னை மீட்டெடுத்தார்?

 
ஒப்புக்கொடுத்திடு ஒருவிசை உன் வாழ்வை கர்த்தர் சீர்படுத்திட
ஓர் வளமான வாழ்வாய் கனிதரும் மரமாய் மாற்றி ஸ்திரப்படுத்திடுவார்
 
ஔஷதமாம் தேவ வார்த்தை உன் வாயை உன் மனதை உன் வாழ்வை நிறைத்து நடத்திட தீர்மானித்திடு

Saturday, April 20, 2013

வாலிபனின் ஜெபம்–6 (Youth Prayer)

 

Youth Quest

தேவனுக்குக் காத்திருப்பதை விட்டு விட்டு

தேவையில்லாத போனுக்காகவும் எஸ்.எம்.எஸ்.-காகவும் காத்திருக்கிறாயோ?

 

தேடி வந்து மீட்டவரை மறந்து விட்டு

தேடிப் போய் பாவத்தினால் வீணாய் போவதை நாடுகிறாயோ?

 

தேவையுள்ள தேசம் உன் முன் திறந்து கிடக்கையில்

தேங்கி போன நிலையில் உன் அறைக்குள் பூட்டிக் கிடக்கிறாயோ?

 

தேற்றறவாளனை தேவன் உனக்கு உனக்குள் தந்திருக்க

தேற்றிடுவார் உண்டோ என்று ஏங்கி நிற்கிறாயோ?

 

தேசமே பாவத்தினால் பாழாய் போய்க் கொண்டிருக்கையில்

தேகத்தின் சுகத்தை இன்பத்தை நாடிக் கொண்டிருக்கிறாயோ?

 

 

 

தேவனுக்காய் காத்திருந்து புது பெலன் பெற்றிடு

தேவையற்ற உறவுகளை தேவப் பெலத்தால் விட்டிடு

 

தேடி வந்தவரை தள்ளி விடாதே - நீ

தேடிப் போன பாவத்தினின்று உன்னை மீட்டெடுத்தவரை மறந்திடாதே

 

தேவையுள்ள தேசத்தில் உனக்கு திறந்த வாசல் உண்டு

தேங்கி போன உன் ஆவிக்குரிய வாழ்வில் எழுச்சி உண்டு

 

தேற்றறவாளனின் உதவியை எப்பொழுதும் நாடிடு - உன்னை

தேற்றி தேசத்துக்காய் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை உண்டு

 

தேசத்தின் பாவத்தை தேவனின் பாரத்தை சிலுவையின் வெற்றியை சிந்திய இரத்தத்தினை பார்த்திடு

தேகத்தை பரிசுத்தத்திற்காகவும் பரமனின் சேவைக்காகவும் ஒப்புக்கொடுத்திடு