Saturday, July 6, 2013

வாலிபனின் ஜெபம்–8 (Youth Prayer)

விண்ணுக்குரியவனாய் மாற்றியருளும்

 
விண்ணுக்குரியவனாய் மாற்றியருளும்

 

 

வழிநடத்தும் வல்ல ஆண்டவரே

உம் வழிகளை காண்பித்தருளும்

வழுவாமல் காப்பவரே

உம் வல்லமையால் நிரப்பியருளும்

வானாதி வானவரே
வாழ்வில் உம் வெளிச்சம் தந்தருளும்
வானத்திற்க்கேரினவரே
விண்ணுக்குரியவனாய் மாற்றியருளும்
 
வீண் சிந்தையையும் செய்கையையும் விட்டிட
விண் சிந்தையால் நிரப்பியருளும்
வீண் போகாமல் காப்பவரே
விழாமல் காத்தருளும்

வாலிபனாய் வாழ்ந்தவரே
வாலிபத்தைக் கரையில்லாமல் காத்திட கிருபையருளும்
வாலிபத்தைத் தருகிறேன்
வல்லமையாய் பயன்படுத்தியருளும்

விரோதமான கையெழுத்தை மாற்றினவரே
வீணானவைகளுக்கு  திரும்பாமல் காத்தருளும்
விரோதிகளை நேசித்தவரே
உம்மைப்போல் நேசிக்க மனம் தந்தருளும்

(தாவீதின்) வேராக வந்தவரே
வேர்பிடிக்கச் செய்தருளும்
விசைப்படகான வாழ்வை
பரிசுத்த ஆவியின் காற்றால் செலுத்தியருளும்

No comments:

Post a Comment