Wednesday, November 26, 2014
Monday, November 24, 2014
வாலிபனின் ஜெபம்–12: விட்டு விட்டேன்
கல்வாரியை பாடிவிட்டு எப்படி நான் கயவனாய் இருந்தேன்?
பரிசுத்தர் என்று போற்றிவிட்டு எப்படி நான் பரிசுத்தம் இழந்தேன்?
மார்போடு அனைத்தவரை விட்டு விட்டு எப்படி நான் மாயலோகத்தை தேடிப்போனேன்?
மகிபனை மகிமைப் படுத்திவிட்டு எப்படி என் மனம் மாசுப்பட விட்டு விட்டேன்?
வருகையை பேசிவிட்டு வருபவரைத் தேடாமல் எப்படி இருந்தேன்?
வின்னுக்குரியவரை போற்றிவிட்டு வீனானவைகளை ஏன் நாடிப் போனேன்?
உதடுகளால் பாடிவிட்டு உள்ளத்தால் ஏன் தூரப்போனேன்?
தூயவர் என்று துதித்துவிட்டு உள்ளத்தால் ஏன் துரோகம் செய்தேன்?
தினம் காலை மாலை ஆராதனையும் வேத வாசிப்பையும் விட்டு விட்டேன்
திடம் பெற பரிசுத்தாவியின் நிறைவை நாடாமல் இருந்து விட்டேன்
கண்களுக்கு காவல் வைக்க மறந்து விட்டேன்
கண்ணியமாய் வாழ கல்வாரி அன்பில் நிறைய மறந்து விட்டேன்
விட்டு விட்டவைகளை விடாமல் செய்ய தீர்மானித்து விட்டேன்
வருகையில் சேர்ந்திட அநேகரை சேர்த்திட வருபவரை நாடிவிடேன்
Tuesday, July 29, 2014
வாலிபனின் ஜெபம்–11: வெறுமையான என்னை…
வெறுமையான என்னை வெறுத்துத் தள்ளாதேயும்
பாவியான என்னைப் பிரித்து விடாதேயும்
அடிமையான என்னை அலட்சியப்படுத்தாதேயும்
சாரம்போன என்னை சோர்வுரச்செய்யாதேயும்
வெறுத்துத் தள்ளவா என்னை வெறுமையாக்கினேன்?
பிரித்து விடவா என்னை பலியாக்கினேன்?
அலட்சியப்படுத்தவா அந்தக் கொடூரக் கோளம் அடைந்தேன்?
சோர்வுரச்செய்யவா நான் சிலுவையைச் சுமந்தேன்?
உம்மை விட்டு நான் தூரம்போனவன்
அவலட்சனங்களில் நான் அகப்பட்டவன்
உம் அன்பிற்கு நான் தகுதியற்றவன்
ஆண்டவரே உமக்குத் துரோகம் செய்தவன்
உன்னை எனதாக்கவே பரம்மிரங்கி வந்தேன்
உன்னை விடுவிக்கவே நான் சிறைப்பட்டேன்
உன்னை நீதிமானாக்கவே என் ஜீவன் ஈன்றேன்
உன்னை மாற்றவே நான் மாண்டு உயிர்த்தெழுந்தேன்
சிலுவையின் தியாகத்தைத் தியானித்திடுவேனே
சிந்தின திருஇரத்தத்தை மறந்திடேனே
சீர்கெட்ட வாழ்வைச் சீர்தூக்கிப் பார்ப்பேனே
சிறந்த வாழ்வு வாழச் சிலுவையன்டை வருவேனே
பெற்ற மன்னிப்பின் விலைக்கிரையத்தை மறந்திடாதே
பின்நிலைமை மோசமாகாதபடி இனி பாவம் செய்யாதே
பரிசுத்தாவியின் நிறைவில் தினமும் வாழ்ந்திடு
பரிசுத்தத்தையே வாஞ்சித்து பாரில் சாட்சி பகர்ந்திடு
Saturday, July 5, 2014
வாலிபனின் ஜெபம்–10: தகாதவைகளைத் தள்ளிவிட…
தகாதவைகளைத் தள்ளிவிடக் கிருபைத் தாரும்
தந்தப் பரிசுத்தாவியை துக்கப்படுத்தாதிருக்கத் திடமனந்தாரும்
தீர்மானங்களில் நிலைத்து நிற்கப் பெலன் தாரும்
திருச்சித்தம் மாத்திரம் நிறைவேற்றும் எண்ணந்தாரும்
தமக்காய் வாழாமல் உமக்காய் வாழும் மனந்தாரும்
தீய இச்சையல்ல திருச்சித்தத்தை நாடிடும் எண்ணந்தாரும்
தீய தருணங்களை ஆவியின் பெலத்தால் மேற்கொள்ளச் செய்யும்
திருப்தியை உம்மில் மாத்திரம் தேடிட செய்திடும்
தூங்கித் தூங்கி பெலனை இழக்காமல் இருக்க உணர்வு தாரும்
தூக்கத்தைக் கலைத்து துதியோடு ஜெபத்தில் காத்திருக்க ஆர்வம் தாரும்
தினமும் உம் சமூகத்தில் தரித்திருக்கும் ஒழுக்கம் தாரும்
திரு வசனத்தைத் தியானித்துத் திடம் பெரும் வாழ்வு தாரும்
தூபமாய் என் வாழ்வு இயேசுவே உம் நறுமணம் வீசச் செய்யும்
திரியாய் தினந்தோறும் உமக்காய் எரிந்து பிரகாசிக்கச் செய்யும்
Wednesday, December 4, 2013
பதுங்கி பதுங்கி, பயந்து பயந்து!
பாவம் செய்தும் மனதில் சஞ்சலம் ஏற்படாமல் இருக்கிறாயோ?
பரிசுத்த வேதாகமத்தைப் படித்தும் வெளிச்சம் கிடைக்காமல் தவிக்கிறாயோ?
பாதைகள் இருந்தும் போவது எதில் என்று தெரியாமல் திக்காடுகிறாயோ?
பாவக் குழி என்று தெரிந்தும் அதற்குள் செல்வதையே தெரிந்தெடுக்கிறாயோ?
பார் பார்க்க பரிசுத்தவானாய் காட்டிக்கொண்டு பாவத்திலேயே வாழ்கிறாயோ?
பார்த்திடக் கூடாது என்று பதுங்கி பதுங்கி பாவத்தை பருகுகிறாயோ?
பாவத்திலே கிடக்கிற உனக்கு பரிசுத்த வாழ்வு எதற்கு என்ற பிசாசின் சத்தம் கேட்கிறதோ?
பாவத்தை மன்னித்து பரிசுத்தமான புது வாழ்வு தருகிறேன் என்ற பரமனின் சத்தம் கேட்கவில்லையோ?
பயந்து பயந்து பாவத்திலே வாழ்ந்த வாழ்வு போதும் என்று முடிவு செய்
பரிசுத்தமாய் வாழவே தெரிந்துக்கொள்ளபட்டாய் என்பதை நித்தமும் நினைவில் வை
பார்வையோடு யோபுவை போல உடன்படிக்கை செய்திடு
பார்த்து பார்த்து பழகிப்போனவைகளை விட்டிடு
பரிசுத்த வேதாகமத்தை இரவும் பகலும் தியானித்திட தீர்மானித்திடு
பொக்கிஷமாய் பரிசுத்த வார்த்தைகளை இருதயத்தில் வைத்து வைத்திடு
பரிசுத்த ஆவியானவரின் ஆளுகைக்குள் முற்றிலுமாய் ஒப்புக்கொடுத்திடு
பரிசுத்த ஆவியின் நிறைவில் நித்தமும் வாழ்ந்திடு
Monday, November 25, 2013
நான் மாய்மாலக்காரனாவேனே!
உம்மை ஆண்டவர் என்று அறிக்கையிட்டு என் வாழ்வின் அனைத்துப் பகுதிகளையும் உம் ஆளுகைக்குள் கொடாதிருந்தால் நான் ஆழமற்றவன்னாவேனே
உம்மை பரிசுத்தர் என்று போற்றிவிட்டு நான் பாவத்திலேயே ஜீவித்தால் நான் பொய்யன்னாவேனே
உம்மை நேசர் என்று சொல்லிவிட்டு என் நேசத்தை உலகத்தின் மீதே வைத்திருந்தால் நான் நேர்மையற்றவன்னாவேனே
உம்மை மீட்பர் என்று மகிமைப்படுத்திவிட்டு நான் மறுரூபமாக்கப்பட்ட வாழ்வு வாழவில்லை என்றால் நான் மகிமையிழந்தவன்னாவேனே
உம்மை சர்வவல்லவர் என்று சொல்லிவிட்டு சாதாரன மனிதனையே சார்ந்திருந்தால் நான் சாரமற்றவன்னாவேனே
உம்மை (ஒரே) மத்தியஸ்தர் என்று மகிமைப்படுத்திவிட்டு மனிதன் முன்னே மண்டியிட்டிருந்தால் நான் மாய்மாலக்காரனாவேனே
உம்மை பிரியமே என்று பிரசங்கித்துவிட்டு (உமக்கு) பிடிக்காத நட்பைப் பிறரோடு கொண்டிருந்தால் நான் வெள்ளையடிக்கப்பட்ட பிரேதக்குளிப்போல்லாவேனே
உம்மை பரத்துக்கேரினவர் என்று பாடிவிட்டு பரத்திற்குரிய சிந்தையற்றவனாய் வாழ்ந்து வந்தால் நான் பாருக்குரியவன்னாவேனே
உம்மை மகிமையின் தேவன் என்று மகிமைப்படுத்திவிட்டு மண்ணுக்குரியவைகளையே முக்கியமாய் கருதி வந்தால் நான் மாய்மாலக்காரனாவேனே
உம்மை பறைசாற்றும் வன்னம் வாழ்ந்தால் பிரசங்கிக்கும் வன்னம் திகழ்ந்தால் கர்த்தரே உம்மைப் போல்லாவேனே
Tuesday, July 9, 2013
வாலிபனின் ஜெபம்–9 (Youth Prayer): பெருமைப் பாராட்ட முடியுமா?
பெருமைப் பாராட்ட முடியுமா?
Saturday, July 6, 2013
வாலிபனின் ஜெபம்–8 (Youth Prayer)
விண்ணுக்குரியவனாய் மாற்றியருளும்
வழிநடத்தும் வல்ல ஆண்டவரே
உம் வழிகளை காண்பித்தருளும்
வழுவாமல் காப்பவரே
உம் வல்லமையால் நிரப்பியருளும்
Friday, April 26, 2013
வாலிபனின் ஜெபம்–7 (Youth Prayer)
அழைத்த தேவனையும் உன் அழைப்பையும் மறந்து போனாயோ?
ஆழத்தில் கிடந்த உன்னை தூக்கி எடுத்தாரே நினைவில்லையோ?
ஐயத்தோடும் வெட்கத்தோடும் வாழவா உன்னை மீட்டெடுத்தார்?
Saturday, April 20, 2013
வாலிபனின் ஜெபம்–6 (Youth Prayer)
தேவனுக்குக் காத்திருப்பதை விட்டு விட்டு
தேவையில்லாத போனுக்காகவும் எஸ்.எம்.எஸ்.-காகவும் காத்திருக்கிறாயோ?
தேடி வந்து மீட்டவரை மறந்து விட்டு
தேடிப் போய் பாவத்தினால் வீணாய் போவதை நாடுகிறாயோ?
தேவையுள்ள தேசம் உன் முன் திறந்து கிடக்கையில்
தேங்கி போன நிலையில் உன் அறைக்குள் பூட்டிக் கிடக்கிறாயோ?
தேற்றறவாளனை தேவன் உனக்கு உனக்குள் தந்திருக்க
தேற்றிடுவார் உண்டோ என்று ஏங்கி நிற்கிறாயோ?
தேசமே பாவத்தினால் பாழாய் போய்க் கொண்டிருக்கையில்
தேகத்தின் சுகத்தை இன்பத்தை நாடிக் கொண்டிருக்கிறாயோ?
தேவனுக்காய் காத்திருந்து புது பெலன் பெற்றிடு
தேவையற்ற உறவுகளை தேவப் பெலத்தால் விட்டிடு
தேடி வந்தவரை தள்ளி விடாதே - நீ
தேடிப் போன பாவத்தினின்று உன்னை மீட்டெடுத்தவரை மறந்திடாதே
தேவையுள்ள தேசத்தில் உனக்கு திறந்த வாசல் உண்டு
தேங்கி போன உன் ஆவிக்குரிய வாழ்வில் எழுச்சி உண்டு
தேற்றறவாளனின் உதவியை எப்பொழுதும் நாடிடு - உன்னை
தேற்றி தேசத்துக்காய் பயன்படுத்துவார் என்ற நம்பிக்கை உண்டு
தேசத்தின் பாவத்தை தேவனின் பாரத்தை சிலுவையின் வெற்றியை சிந்திய இரத்தத்தினை பார்த்திடு
தேகத்தை பரிசுத்தத்திற்காகவும் பரமனின் சேவைக்காகவும் ஒப்புக்கொடுத்திடு